கட்டார் நெருக்கடி : இலங்கையின் அந்நிய செலாவணியில் பாதிப்பு



கட்டாரில் நிலவும் இராஜதந்திர நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கிடைக்க பெறும் அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி கிடைக்கபெறுகின்றமை குறைவடைந்துள்ளதன் காரணமாக நாட்டில் பொருளாதார பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இது தொடர்பாக ஆழமாக சிந்தித்து இதிலிருந்து மீள்வதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.