ரிஃபாத் ஷரூக்கின் செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

தமிழக மாணவன் ரிஃபாத் ஷரூக் உருவாக்கிய மிகச்சிறிய செயற்க்கைக் கோள் நாசாவிலிருந்து விண்ணில் பாயந்தது.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 18 வயதே ஆன ரிஃபாத் ஷரூக் என்ற மாணவர் கலாம் சேட் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பெயரில், 64 கிராம் மட்டுமே எடைகொண்ட குட்டி சேட்டிலை தயாரித்தார். இது முதன் முதலில் 3டி தொழில்நுட்பத்தில் தாங்கள் தயாரித்த செயற்கைக் கோள் என்று கூறப்படுகிறது. இதனை மெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விண்ணில் நேற்று விண்ணில் ஏவியது. இது வெற்றிகரமாக ஏவியதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விண்வெளித்துறையில் சாதனை பெற நினைப்பவர்கள் கடுமையாக உழைத்தால், செவ்வாய் கிரகத்தை வெல்வதும், சாத்தியமே என ரிஃபாத்துக்கு உறுதுணையாக இருந்தவர்கள் தெரிவித்தனர். மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மதிப்பிடக் கூடாது என நிரூபிக்கும் வகையில், உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இளம் விஞ்ஞானியான ரிஃபாத், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 750 மதிப்பெண்களை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.