இஸ்லாம்கூறும் நல்லிணக்கம் கட்டியெழுப்புவோம்: ஐ.ஆர்.எப் நிகழ்வில் பஹத் ஏ.மஜீத் உரை

இலங்கையில் மூவின மக்களும் சமாதானமாக வாழும் இச்சந்தர்ப்பத்தில்  ஒரு குழு வேண்டுமென்று குழப்பத்தை உண்டு பண்ணிக்கொண்டு இருக்கிறது, இதற்கு பதிலீடாக நாங்கள் இஸ்லாம் கூறும்  நல்லிணக்கத்தை உண்டு பண்ணுவதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று சிலோன் முஸ்லிம் பிரதானி பஹத் ஏ.மஜீத் குறிப்பிட்டார்,

ஐ.ஆர்.எப் அமைப்பு நடாத்திய இப்தார் வைபவத்தில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்தார், மேலும் உரையாற்றிய அவர்,

பண்டைய காலம் தொட்டு இலங்கை முஸ்லிம்கள் ஏனைய மக்களோடு பின்னிப்பிணைந்த வாழ்ந்ததுதான் வரலாறு, ஆனால் இன்று அந்த வரலாற்று விடயத்தை பொய்யாக்கும் சதி முயற்சியில் அரசியல் சக்திகள் முனைப்பாக இயங்கி வருகிறது. இந்த முயற்சியை தவிடு பொடியாக்க இளைஞர்கள் முயற்சி செய்ய வேண்டும், பௌத்த தமிழ் மக்களோடு அன்பாகவும் பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.