மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளுக்கு இப்தார் நிகழ்வு



 MI. அஸ்பாக்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கதிகளுக்கு கல்குடா அல்-கிம்மா நிறுவனம் பல்வேறு உதவிகளையும் வருடா வருடம் இப்தார் நிகழ்வுகளையும் செய்து வருகின்றது.

அதன் தொடரில் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறுன் ஸஹ்வி அவர்களின் பணிப்புரைக்கு அமைய இவ்வருடமும் சிறையில் உள்ள கைதிகளுக்கு இப்தார் நிகழ்வொன்று 13-06-2016 செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 450 சிறைக்கைதிகளுக்கு இராப்போசனமும் புனித நோன்பை நோற்றிருந்த 100 முஸ்லிம் கைதிகளுக்கு விசேடமாக இப்தார் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன் போது சிறைக் கைதிகளுக்கு விளிப்பூட்டும் வகையில்; மௌலவி எம்.எம்.எஸ். ஹாறுன் ஸஹ்வி அவர்களினால் மார்க்கச் சொற்பொழிவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறைச்சாலை அத்தியட்சகர் ஏ.யூ.எம். அக்பர் அவர்களும், சிறைச்சாலை பொறுப்பதிகாரிகளும், நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.