சாய்ந்தமருது தோணாவின் அவலத்தை யாரிடம் முறையிடுவது?-எம்.வை.அமீர் -

சாய்ந்தமருதில் காலத்துக்குக் காலம் அரசியல்வாதிகளால் பேசுபொருளாக்கப்படுவது, தோணா அபிவிருத்தி என்ற வாசகம். ஆனால் குறித்த தோணா இன்றுவரை முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுமில்லை. இதன் சீர்கேடுகளை யாரிடம் முறையிடுவது என்ற அறிவும்  மக்களுக்கு இல்லை.

இன்று தோணாவின் நிலை யாரும் கவனிப்பாரற்றது. இது யாருடைய நிருவாகத்தின் கீழ் உள்ளது என்ற அறிவும் இல்லை. இப்போதைக்கு வெட்டுவாய்க்காலின் வடிச்சல் ஓடையாக உள்ளது. குறித்த நீரை முகத்துவாரம் ஊடாக வெட்டிவிட்டால் அது ஓடிவிடும் அதனை செய்ய யாருக்கும் அக்கறையில்லை. இதனை யாரிடம் முறையிடுவது மக்களுக்கு புரியவுமில்லை.

வயல்நீர் நிரம்பியுள்ளதால் சல்பீனியாக்களுக்கு கொண்டாட்டம் அது கொளுத்து வளர்கிறது. நுளம்புகளுக்கு அதைவிடக்கொண்டாட்டம். இரவில் இரக்கமில்லாதவர்களால் வீசப்படும் குப்பைகளால் துர்நாற்றம்! நோய்கள் பரவும் அபாயம்.

கல்முனை மாநகர சபையே! பொதுச்சுகாதார அலுவலகமே!பிரதேசசெயலகமே! சம்மந்தப்பட்ட அதிகாரிகளே! இப்பிராந்திய மக்களின் அவலத்தை கண்டுகொள்வீர்களா?

பலகோடி ரூபாய்கள் செலவிட்டு அபிவிருத்தி செய்யப்படும் எனக்கூறிக்கொண்டு சிலகோடிகளை செலவிட்டுவிட்டு ஓய்வெடுக்கும் நகர திட்டமிடல் அமைச்சே! குறையோடு இருக்கும் வேலைகளை எப்போது ஆரம்ப்பிப்பீர்கள்?

பதில்களுக்காய் மக்கள்.