கோவிலில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கு நடத்திய இஃப்தார் விருந்துஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

இந்தியா கேரள மாநிலம் மல்ப்புரத்தில் சுமார் 400 முஸ்லிம்களுக்கு இந்துக்கள் கோவிலில் வைத்து இஃப்தார் விருந்து நடத்தியுள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியாகும், இந்த மாவட்டத்தில் உள்ள வெட்டிச்சிரா பகுதியில் உள்ள லக்‌ஷ்மி நரசிம்ம மூர்த்தி கோவிலில், கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் 400 முஸ்லிம்களுக்கு இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 100 முஸ்லிம் அல்லாதவர்களும் கலந்துகொண்டனர்.
விருந்து ஏற்பாடு செய்திருந்த கோவில் நிர்வாகம், மனித நேயத்தை வளர்ப்பதற்காக இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதனால் மேலும் மதங்களுக்கிடையேயான ஒற்றுமை ஓங்கும் என்றும் தெரிவித்தது.

மேலும் கோவில் கட்டுமானப் பணிகளுக்காக முஸ்லிம்கள் பெருமளவில் உதவி புரிந்ததையும் அவர்கள் நினைவு கூறினர்.