நோன்பு காலத்திலும் சாராய போத்தல்களுடன் கடற்கரையில் முஸ்லிம் இளைஞர்கள்சுஹைல் முஹம்மட்

புனித றமழான் மாதத்தில் நன்மைகள் புரிந்து சுவர்க்கம் செல்லுவதே இலக்கு, ஆனால் இன்றைய நவீன காலத்தில் பாவங்கள் அதிகமாக செய்து கொண்டிருக்கும் இளைஞர்களை காணமுடிகிறது,

நோன்பு திறந்தவுடன் சிகரட் குடிப்பதை காணமுடிகிறது, சிலவேளையில் பகல் வேளையில் நோன்பு நோற்காமல் சிலர் மதுபாவனையை செய்வதையும் காணமுடிகிறது, இதுவே ஜாஹிலியத்.

இன்று 15-06-2017 காலை IRF மற்றும் சிலோன் முஸ்லிம் இணைந்து சேகரித்த மதுப்பாவனை பொருட்களின் எண்ணிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த கடற்கரையை அண்மித்த கிராம வாசிகள், நோன்பு காலத்திலும் முஸ்லிம் இளளைஞர்கள் கடற்கரைக்கு வந்து குடிப்பதாக கூறினர். அது மாத்திரமின்றி பெண்களும் சிலவேளையில் குடிப்பதாகவும் கூறினர்.

இன்று 500க்கும் மேற்பட்ட சாராய போத்தல், 500க்கும் அதிகமான பியர் டின்கள், 1000க்கும் அதிகமான சிகரட் பெக்கட்கள் அட்டாளைச்சேனை 06-07ம் குறிச்சியில் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.