அகதிகளுக்கு இத்தாலி விடுத்துள்ள எச்சரிக்கை
இத்தாலி வெளிநாட்டு அகதிகளுக்கு தடைவிதிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்டின் அரசாங்கத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட ஆபிரிக்க நாடுகளில் இருந்து கடந்த நான்கு நாட்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான அகதிகள் தங்களின் பயணத்தை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரையில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான அகதிகள் இத்தாலியில் தரையிறங்கியுள்ளனர். அகதிகள் குறித்த பிரச்சினை நாட்டில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக, இத்தாலியின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அகதிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் உரிய வகையில் செயற்படவில்லை என்பதாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.