தேரர்களை பற்றி தரக்குறைவாக பேசும் வாய்களை மூடிக் கொள்ளவும் - மாகல்கந்தே சுதந்த தேரர்

ravana balaya

நாட்டில் வீணான பிரச்சினையை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாகவும், நாம் நிறுத்தியுள்ளோம், நீங்களும் நிறுத்துங்கள் எனவும் ராவணா பலய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் வேண்டுகோள் விடுத்தார்.

அசாத் சாலி என்பவர் இந்த நாட்டிலுள்ள தேரர்களை தரக் குறைவாக பேசிவருகின்றார். புத்தசாசன அமைச்சருக்கு கௌரவக் குறைவான முறையில் பகிரங்கமாக ஏசுகின்றார். இவர் யார் ? எங்கிருந்து வந்தவர்?. நாம் தெளிவாக கூறுகின்றோம். நாம் இப்போது நிறுத்தியுள்ளோம். நீங்களும் நிறுத்திக் கொள்ளுங்கள். நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தாதீர்கள்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் மீது பௌத்த தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும், அதற்காக தான் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் கூறியுள்ளார். நாம் அவருக்கு கூறுகின்றோம்.

அம்மையாரே, நீங்கள் இந்த நாட்டிலுள்ள முழு பௌத்த மக்களிடமும் மன்னிப்புக் கோருங்கள் ! எனவும் தேரர் நேற்று (28) பொதுபல சேனாவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.