ஒற்றுமை சீர்குலைந்தது; இலங்கை முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாள்!இலங்கை முஸ்லி்ம்கள் ஒரு காலத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து ஏனைய சமூகங்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தனர், ஆனால் இன்று அந்த ஒற்றுமை சீர்குலைந்துள்ள காரணத்தினால் பேரினவாத சக்திகளும் இறைகோபமும் ஞானசார போன்றவர்களின் வடிவில் வருகிறது.

நேற்று மாலை கூடிய பிறை மாநாடு இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தோடு நிறைவுற்றது, அத்தீர்மானமானது 30 நோன்புகளையும் பூர்த்தியாக்கப்பட்டு பெருநாள் கொண்டாடப்படுதல், இந்த மாநாட்டு குழுவில் பல ஜமாஅத்துக்களை சேர்ந்தவர்கள் உள்ளனர் அப்படி இருக்கின்ற போது சர்வதேச பிறையை அடிப்படையாக வைத்து இன்று பெருநாளை கொண்டாட அன்சார் தப்லிகி போன்றவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் இலங்கையில் இரண்டு தினங்களில் பெருநாள் கொண்டாடப்படுகிறது, நாமே ஒற்றுமையற்றிருக்கும்போது இனவாதிகள் எவ்வாறு சீண்டாமல் இருப்பார்கள், அரசியலில் வேறுபட்டோம், ஊர்வாதக்கருத்துக்களிவ் வேறு பட்டோம். இன்று பெருநாளிலும் வேறுபட்டுள்ளோம்.