பாடசாலை ஒன்றில், பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இடையில் மோதல்


(க.கிஷாந்தன்)

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட, திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில், பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால், பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

29.06.2017 அன்று குறித்த பாடசலையின் ஆசிரியர் ஒருவர் மாணவியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திடம்  30.06.2017 அன்று முறைப்பாடு செய்வதற்கு சென்ற பெற்றோர்களுக்கும் குறித்த ஆசிரியருக்கும் முறுகல் நிலைமை உருவாகியது.

இதனை தொடர்ந்து ஆசிரியரும் பெற்றோர்களும் அங்கிருந்த மாணவர்கள் சிலரும் கைகலப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது ஆசிரியர் ஒருவர் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தாக்குதலுக்குள்ளான பெற்றோர் ஒருவரும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, குறித்த பாடசாலைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.