வைதில் மரணித்த சகோதரரின் உடல் இலங்கை அனுப்பி வைப்புஇலங்கை வாழைச்சேனை ஹைராத் வீதியை சேர்ந்த சகோதரர் முஹம்மத் பைசல் நேற்றைய தினம் குவைத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மரணமடைந்த சகோதரரின் உறவினர்கள் குவைத் மண்டல துணை செயலாளர் சகோதரர் (இலங்கை ஒட்டமாவடி) நாசர் அவர்களை தொடர்பு கொண்டு உடலை இலங்கைக்கு அனுப்பி தருமாறு கேட்டுக்கொண்டனர்.

அதனடிப்படையில் துரிதமாக களமிறங்கிய SLTJ சகோதரர்கள் மற்றும் TNTJ மருத்துவ அணியினர் தூதரக வேலைகளை முடுக்கி விட்டு ஜனாஸாவை இலங்கை அனுப்பி வைப்பதற்கான ஆவணங்களை தயார் செய்தனர்.

உடனடியாக குவைத் ஷபா மருத்துவமனையில் இருந்து இலங்கை கொண்டு செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அல்ஹம்து லில்லாஹ்

 ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்