Jun 15, 2017

இன்றுடன் அளுத்கம எரிந்து ஆண்டுகள் மூன்று,நம்பி ஏமாந்தது சோனக சமுகம்.அளுத்கம பற்றி எரிந்த போது அல்லாஹூ அக்பர் சொன்னவர்கள் இன்று பள்ளிகளில் பன ஓதுகிறார்கள்.

மகிந்த ராஜபக்ச எனும் இனவாதியின் பின் புலத்திலிருந்து ஞானசார தேரர் எனும் பெளத்த மதகுரு அளுத்கம எனும் ஊரை எரியூட்டினான், அல்லாஹூஅக்பர் உடனே அவனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் இல்லாவிட்டால் சமுகம் சிதறி இன்னுமொரு மியன்மார் உருவாகும், மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பவர்கள் காபீர்கள் பள்ளிகளின் மிம்பர்களிலும் அரசியல் பேசினார்கள். சந்திரிகா நாய்ககூண்டில் அடைப்பேன் என்றார்

ராஜித சேனாரத்ன அந்த மாவட்டத்தின் அமைச்சராக இருந்தார்.அவ்வேளை வெளிநாடு சென்றிருந்தார் வந்தவுடன் சொன்னார் நான் இருந்தால் மக்களை காப்பாற்றி இருப்பேன் என்றார். முஸ்லீம் தலைவர்கள் அறிக்கை பல விட்டனர்.

சில இஸ்லாமிய போதனை என்று அரசியலை விற்பனை செய்யும் சில ஏஜன்டுகள் பல் வேறு நிகழ்ச்சிகளை நடாத்தி அரசியல் பாடம் நடாத்தினார்கள்
சில அமைப்புகள் தமது பெயரை பாய்ந்தடித்து கொண்டு ஒப்பந்தம் வேற செய்து கொண்டனர்.

நல்லாட்சியை விரும்பி மக்கள் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு ஒரு புறம் பாய்ந்த போது அவர்களின் உணர்வுகளுக்கு தீனி போட்டு தலைவர்களும் அரசியல் சவாரி செய்தனர்.

அழுத்கம பற்றி எரிந்து ஆண்டுகள் மூன்று கடந்திருக்கிறது, நாய்க் கூண்டில் அடைக்க வேண்டிய குற்றவாளி சட்டத்தையும் நாட்டின் ஒழுங்கையும் கையிலெடுத்திருக்கிறான்.நஷ்ட ஈடு வழங்க எந்த தலைவர்களும் முன்வரவில்லை

அமைப்புகளும் இயக்கங்களும் செய்த ஒப்பந்தத்தை வெளிப்படுத்த வில்லை
அது தொடர்பில் நியாயம் கோரவில்லை அவற்றை பேச கூடமுடியவில்லை
ராஜித சேனாரத்ன அழுத்கம பற்றி ஊடகவியலாளர் வினவிய போது ஞானசாரவை கைது செய்வது இலகு வானதில்லை என்றும்  ஆட்சி மாற்றம் வடக்கில் மக்களை நிம்மதியாக வாழ வைத்திருக்கிறது என்பதை பார்க்கும் போது டயஸ் போரக்களின் விளையாட்டின் பிரதான பங்காளி இவராக இருக்குமோ என்கின்ற சந்தேகமே தோற்று விக்கப்பட்டிருக்கிறது

ஞானசாரவை தோற்றுவித்த யாரன ரணிலிடம் கேளுங்கள் என அமைச்சர் ரிசாட் கூறுகின்ற போது இவையெல்லாம் புரிந்து கொண்டு ஏன் இவர் நல்லாட்சி பக்கம் போனார் எனும் கேள்வியும்  ரவூப் ஹக்கீம்
எங்களுக்கு தெரியும் யார் என வழமை போல வாங்கிய காசிக்காக சாணக்கியமாக மழுப்பி விடுவதும் தாெடர்கிறது

நல்லாட்சி உருவாக துணிந்து பேசிய எமது மக்கள் ஆளுமைகள் இன்று மெளனித்து கிடக்கின்றன. அழுத்கம பற்றி எரிந்த போது இருந்த உணர்வுகள் இன்று நல்லாட்சி எனும் மாயச் சொல்லால் மூடி மறைக்கப்பட்டது
இன்று முஸ்லீம்களின் உணர்வுகளை தூண்டி அறுவடைய செய்யும் ஆசாத் சாலி கூட ஞானசார தேரர் நோர்வேயின் அஜன்டாவாக இருக்குமோ என அச்சம் வெளியிட்டுள்ளார்.

இது வடக்கு கிழக்கு இணைக்கும் வரை இந்தியா தம்மை அடிமைப்படுத்தும் செயற்பாட்டை அடைந்து கொள்ளும் வரை தாடரும் என அரசியல் ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அன்று மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது ஞானசார தேரரை சம்பிகதான் உருவாக்கி பாதுகாத்தார்.

முஸ்லீம்களின் வாக்குகளை பெருவாரியாக பெற முடியாத
மகிந்த இனவாத செயற்பாட்டை கண்டிக்க போய் தாம் பெளத்த வாக்குகளை இழந்து விடுவோமோ?  என அச்சம் கொண்டதன் விளைவு
ஞானசரவை உருவாக்கி பாதுகாத்தவரும் எதிரணிக்கு தாவி முஸ்லீம் தலைவர்களும் பணத்துக்காகவும் பதவிக்காகவும் மக்கள் மாறி விட்ட அச்சத்துக்காகவும் தமது இருப்பை தக்க வைக்கவும் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் தூக்கி போட்டனர்.

அளுத்கமயில் ஒரு இரவில் அடைந்த துயரமும் இன்று தினம்தினம் எரியூட்டப்படும் அவலத்தையும் எம் தலைவர்களின் வெகுளித்தனத்தால் நிவர்த்தி செய்ய முடியுமான நம்புவது மிகப் பெரிய முட்டாள்தனம்.

அஸ்மி அப்துல் கபூர்

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network