Jun 1, 2017

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதியிடம் கோரிக்கைஏ.ஆர்.ஏ. பரீல்

நாட்டில் இனங்கள் மற்றும் மதங்­க­ளி­டையே முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்கும் வகை­யி­லான செயற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ளமை குறித்து நேற்­றைய தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்ற கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­ப­தியின் தலை­மையில் நடை­பெற்ற இக் கூட்­டத்தில் முஸ்லிம் அமைச்­சர்­களும் அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபை பிர­தி­நி­தி­களும் நாட்டில் சம­கா­லத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­களை விளக்கி அவற்­றுக்கு உடன் நட­வ­டிக்­கை­களைக் கோரி­னார்கள்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஞான­சார தேரரே மிகத் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கிறார். ஆனால் அவ­ருக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அரசு மௌனம் காக்­கி­றது. கடந்த கால அர­சாங்­கத்தில் உலமா சபை ஞான­சார தேர­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. ஆனால் பலன் ஏற்­ப­ட­வில்லை.

அவர் வீதியில் இறங்கி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும் இஸ்­லாத்­துக்கு எதி­ரா­கவும் விமர்­ச­னங்­களை வெளி­யி­டு­வ­தற்கு ஒரு முற்­றுப்­புள்ளி வையுங்கள் என அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி ஜனா­தி­ப­தியை  வேண்டிக் கொண்டார்.

நாம் இவ்­வி­டத்­துக்கு தீர்­வொன்­றினை நாடியே வந்­துள்ளோம். தீர்வே எமக்கு முக்­கியம். பேச்­சு­வார்த்­தைகள் நடத்திக் கொண்­டி­ருப்­பதில் பய­னில்லை என்றும் அவர் ஜனா­தி­ப­தி­யிடம் எடுத்துக் கூறினார்.

முஸ்­லிம்­க­ளா­கிய நாம் பிக்­கு­மார்­களை கண்­ணி­யப்­ப­டுத்­து­கிறோம். அவர்கள் நம்­ப­கத்­தன்­மை­யுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஞான­சார தேரர் ஏன் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இவ்­வாறு செயற்­ப­டு­கிறார். அவரை அழைத்து அவ­ரிடம் இது பற்றிக் கேளுங்கள். முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைக்கு தீர்­வொன்று பெற்­றுத்­தா­ருங்கள் என்றும் அஷ்­ஷெய்க் ரிஸ்வி முப்தி ஜனா­தி­ப­தி­யிடம் வேண்­டிக்­கொண்டார்.
நேற்று மாலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­ப­தியின் தலை­மையில் நடை­பெற்ற கலந்துரையாடலி­லேயே ரிஸ்வி முப்தி இவ்­வாறு தெரி­வித்தார்.

தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ, புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்றம், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மற்றும் இந்­து­ச­மய விவ­கார அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன், சுற்­று­லாத்­துறை அபி­வி­ருத்தி, கிறிஸ்­தவ சமய விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க ஆகிய சமய விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், அமைச்­சர்­க­ளான எம்.எச்.ஏ.ஹலீம், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், பைசர் முஸ்­தபா, ரிஷாத் பதி­யுதீன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோரும் நாட்டில் தொடர்ந்து இடம்­பெற்­று­வரும் பள்­ளி­வாசல் தாக்­கு­தல்கள் , முஸ்லிம் வர்த்­தக நிலைய தாக்­குதல்கள் தொடர்பில் தங்கள் கண்­ட­னங்­களை வெளி­யிட்­டனர்.

சட்­டத்தை எவ்­வித பாகு­பா­டு­க­ளு­மின்றி அமுல் நடத்தும்படி ஜனா­தி­ப­தியை அவர்கள் வேண்டிக் கொண்­டனர்.

 வில்­பத்து விவ­கா­ரமும் இங்கு கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. முகநூல் பதி­வு­களில் வெளி­யி­டப்­பட்டு வரும் இன, மத பேதங்­களை தோற்­று­விக்கும் செயற்­பா­டுகள் குறித்தும் கவனம் செலுத்­தப்­பட்­டது.

கடந்த சில வாரங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக 6 முறைப்­பா­டுகள் பொலிஸில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது. தந்­து­ரையில் முஸ்லிம் இளைஞன் புத்­த­ருக்கு எதி­ராக வெளி­யிட்ட முகநூல் பதிவு தொடர்­பிலும் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.

கண்டி, அஸ்­கி­ரிய, மல்­வத்த பீடங்­க­ளி­லி­ருந்து கலந்­து­கொண்ட குரு­மார்கள், பொலிஸார் தோர­யா­யவில் ஞான­சார தேரரை கைது செய்ய முயற்­சித்­தமை தொடர்பில் தங்களது கண்டனங்களை வெளியிட்டனர். அது தவறு என்றும் சுட்டிக்காட்டினர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வமத தலைவர்களின் கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் நடத்தி பிரச்சினைகளை உடனுக்குடன் இனங்கண்டு தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார். சட்டமும் ஒழுங்கும் பாகுபாடின்றி அமுல் நடத்தப்படும் என்றும் கூறினார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network