என்னுடைய மரணஊர்வலத்திற்காக காத்திருக்கிருக்கின்றனர்; ஞானசார கடிதம்ஸ்ரீலங்கா பொலிசாரின் விசேட படையணிகளின் கண்களில் மண்ணைத் தூவி, தொடர்ந்தும் தலைமறைவாக இருக்கும் ஞானசார இன்றைய சிங்கள வார இதழொன்றுக்கு இரகசிய இடத்திலிருந்து நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில், தமது மரண ஊர்வலத்துக்காக வாயூறக் காத்துக்கொண்டிருக்கிறார்களே தவிர பௌத்தத்துக்கு இந்நாட்டில் இழைக்கப்படும் அநீதி குறித்து பேசுவதற்கு யாரும் இல்லையென ஞானசார தெரிவித்துள்ளதுடன் கூட்டு எதிர்க்கட்சியினர் பேச வேண்டிய விடயங்களின் மௌனித்திருந்து கொண்டு பயனற்ற அரசியல் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கையெழுத்தில் எழுதப்பட்டுள்ள நீண்ட கடிதத்தில் வாழ்க்கைச் செலவு உயர்வு போன்ற முக்கிய மக்கள் பிரச்சினைகளைப் பற்றிக்கூட பேச முடியாத அளவு எதிர்க்கட்சியினர் ‘அரசியல்’ செய்து வருவதாகவும் தம்மைப் பிரிவினைவாதியாக அடையாளப்படுத்தி அதில் சுகம் காண்பதாகவம் குற்றஞ்சாட்டியுள்ள ஞானசார தமது அமைப்பின் பின்னால் மக்கள் வெகுண்டெழுந்து வருவதாகவும் அதற்கான காரணம் தமது அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது எனவும் தெரிவித்துள்ளதாக செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சம்பிக்க மற்றும் அத்துராலியே ரத்ன தேரரரின் இயக்கத்திலேயே ஞானசார இயங்கி வந்ததாக பொது பல சேனா அமைப்பினரே தகவல் வெளியிட்டுள்ளமையும் ஞானசார, நீதிமன்ற பிடியாணையையும் மீறி தொடர்ந்தும் தலைமறைவாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த செய்தியானது கொழும்பு டுடே  மற்றும் சோனகர்   இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது.
http://www.colombotoday.com/34774-233/