லண்டனில் பயங்கரவாத தாக்குதல்! இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆபத்தா?


லண்டனில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எவ்வித ஆபத்துக்களும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி மிகவும் பாதுகாப்பாக உள்ளதென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி தற்போது லண்டன் நகரில் தங்கியுள்ளது.
இன்று அதிகாலை லண்டனின் பல இடங்களில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச ஊடகங்களின் பிரதான தலைப்பாக இந்த கிரிக்கெட் தொடர் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thanks : Tamilwin