யாழில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டதுபாறுக் ஷிஹான்-

வடமாகாண பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று(10)    யாழ். இந்து கல்லூரியில் நடைபெற்றதுடன், இதில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வின் போது 219 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதில் பெளதீகவியல் பாடத்திற்கு 16 பட்டதாரிகளும், இரசாயனவியல் பாடத்திற்கு 11 பட்டதாரிகளும், உயிரியல் பாடத்திற்கு 13 பட்டதாரிகளும், இணைந்த கணிதம் பாடத்திற்கு 10 பட்டதாரிகளும் உள்ளீர்க்கப்பட்டனர்.

அத்துடன் உயிரியல் தொழிநுட்பம் பாடத்திற்கு 15 பட்டதாரிகளுக்கும், பொறியியல் தொழிநுட்பம் பாடத்திற்கு 12 பட்டதாரிகளுக்கும், தொழிநுட்பத்திற்கான விஞ்ஞான பாடத்திற்கு 2 பட்டதாரிகளுக்கும் விஞ்ஞான பாடத்திற்கு 95 பட்டதாரிகளுக்கும், கணித பாடத்திற்கு 45 பட்டதாரிகளுக்குமாக நியமனங்கள் வழங்கப்பட்டன.