கத்தாரிலிருந்து இலங்கையர்கள் நாடுதிரும்பலாம்; இலங்கை துாதரகம் அறிவிப்புகத்தார் நாட்டிலிருந்து இலங்கையர்கள் எப்போது வேண்டுமானாலும் நாடுதிரும்ப முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

கத்தாரின் அசாதாரண சூழ்நிலைகளை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் நாடு திரும்ப நாடினால் இலங்கை துாதரம் அனைத்து நடவடிக்கைகளையும் செய்து கொடுக்கும் எனவும் அறிவித்துள்ளது.

இலங்கையர்கள் எந்த உதவி வேண்டுமானாலும் கட்டார் துாதரகத்தில் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளது. கத்தாரில் ஒர இலட்சத்து நாற்பதாயிரம் இலங்கையர்கள் தொழில் புரிவது குறிப்பிடத்தக்கது.