அமெரிக்க விசா; தடை உத்தரவில் தளர்வு6 இஸ்லாமிய நாட்டினர் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை உத்தரவில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினரை பார்க்க, தொழில் ரீதியாக அமெரிக்கா வர 6 நாட்டினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

6 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்திருந்தார். அவரின் உத்தரவுப்படி, சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிபரின் இத்தடை உத்தரவு தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்த 6 நாட்டை சேர்ந்தவர்கள் தங்களின் நெருங்கிய உறவினரை பார்ப்பதற்காகவும், தொழில் ரீதியாகவும் அமெரிக்கா வருவோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.