மத மோதலை தூண்டும் விதமாக இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் மீது தொடரும் தாக்குதல்கள்அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
அரியானா மாநிலம் ஜிந்த் அருகே உள்ள கிராமத்தில் மர்ம கும்பல் ஒன்று பள்ளிவாசல் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதில் பள்ளிவாசல் இமாம் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டம் அஞ்ச்ரா குர்த் கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் பண்டிகைக்கு முந்தைய தினம்  கும்பல் ஒன்று புகுந்து தக்குதல் நடத்தியது. இதில் பள்ளிவாசல் இமாம் உட்பட மூன்று பேர் காயமடைந்துளளனர்.

அடுத்த நாள் ரமலான் பண்டிகை கொண்டாட்டத்திற்கு முஸ்லிம்கள் தயாராக இருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத மோதலை தூண்டும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை வழக்குப் பதிவு செய்து காயமடைந்தவர்கள் சொன்ன அடையாளத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வன்முறை எதுவும் நிகழ்ந்துவிடாமல் இருக்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது