அமைச்சர் றிசாதின் தொலைக்காட்சியில் நோன்புகலத்தில் பாட்டும் கூத்தும்கருடன்

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு சொந்தமான உதயம் ரீ.வி ஆரம்பத்தில் முஸ்லிம் தொலைக்காட்சியாக இயங்க தீர்மானிக்கப்பட்டது, செரண்டிப் ரி.வி எனும் இஸ்லாமிய தொலைக்காட்சியே உதயம் ரி.வியாக மாற்றம் பெற்றது.

இந்த தொலைகாட்சி முஸ்லிம்களுக்கானதான தொலைக்காட்சி என்று கூறப்பட்ட போதும் அதன் தலைமை பீடம் ஏனைய இதர தொலைக்காடசி போல மாற்றிவிட்டது, காரணம் கேட்டபோது பாட்டும் படமும் போட்டால்தான் பார்ப்பார்கள் எனக்கூறுகின்றனர்.

புனித றமழான் காலத்திலும் படங்களும் சினிமாப்பாடல்களும் ஒளிபரப்பாகிறது. இந்த தொலைக்காட்சி அமைச்சருடையது இல்லை என்று கூறுவார்கள், தேவையேற்படின் வீடியோ ஆடியோ ஆதாரங்கள் பிரசுரிக்கப்படும்.

தயவு செய்து இதனை உரிமையாளர்கள் என சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகள், முஸ்லிம் வணிகர்கள் திரைப்படம் போடாவிட்டால் ரி.வி நடத்தமுடியாது என்றால் அப்படி ஒரு ரி.வியை நடத்த வேண்டாம்.