முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் எரிப்பு; சி.ஜே.பி தெற்காசிய அமைப்பு கண்டனம்


இலங்கையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் சொப்பிங் கொம்ளக்ஸ்கள் எரிக்கப்பட்டு வருவதை தொடர்ச்சியாக காண முடிவதாக குறிப்பிட்டுள்ள கவுன்சில் ஒப் ஜஸ்டீஸ் ஒப் பீஸ் அமைப்பு, ஏன் அரசு இதற்கான சரியான தீர்வை எடுக்கவில்லை என கேட்டுள்ள .இதே வேளை தங்களது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது,

தென் மற்றும் மத்திய மாகாணம் உள்ள நாட்டின் நாலாபுறங்களிலும் செறிந்து வாழும் சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்களின் வர்த்தக மற்றும் பள்ளிவாசல்கள் எரிக்கப்படுவது திட்டமிட்ட செயலாக இருக்க முடியும், இது கடந்த அரசாங்கத்திலும் நடைபெற்றது. இந்த விடயத்தை முற்றாக தடைசெய்ய வேண்டுமெனின் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விடயத்தினை கண்காணிக்குமாறு சர்வேதச அமைப்புகள் சிலவற்றிற்கு எமது அமைப்பு கடிதங்கள் அனுப்பியுள்ளது, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் இதேவேளை அரசு உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என அறிவித்துள்ளது சி.ஜே்.பி.