போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை பெண்கள் திருமணம் செய்துகொள்ளாதீர்கள்பாறுக் ஷிஹான்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை  பெண்கள் திருமணம் செய்துகொள்ளாதீர்கள் என தெரிவித்த யாழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.கௌதமன், அவ்வாறானவர்களை திருமணம் செய்தால் மிக விரைவில் பெண்களுடைய வாழ்க்கை மிகமோசமானநிலைக்கு தள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.  

“போதையை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் கிராம மட்ட விளிப்புணர்வு  பேரணியும், கருத்தரங்கு நிகழ்வும் நேற்றைய தினம்(2) வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  கோப்பாய் மத்தி  கிராம சேவகர் பிரிவில் முன்னெடுக்கப்பட்டது. அதில் கலந்த கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 

நாளொன்றுக்கு புகைப்பதற்காக 33 கோடி செலவும்,  மதுபானத்துக்காக 30 கோடி செலவும், புகைத்தலால் நாளொன்றுக்கு  72 பேர் மரணிக்கும் மாதுபானத்தால்  62 பேர் மரணிக்கும் தேசத்தில் இருந்து புகைத்தல் வளிப்புணர்வை பற்றி பேசுவது மிகவும் கடினமானதொன்று.

போதை பொருள் பாவனை தொடர்பில் அனைவருக்கும் விளிப்புணர்வு உண்டு.ஆகவே விளிப்புணர்வுகள் சிலவேளைகளில் பயனற்றவையாக போகின்றது. எனவே போதைப்பொருள் தொடர்பான விளிப்புணர்வை நீண்டகால இலக்காக கொண்டு  மாணவர்கள் மத்தியில் தான் ஏற்படுத்த வேண்டும். போதைப்பொருள் பாவனையில் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் அல்லது ஆரம்பிக்க கூடிய பருவத்தில் உள்ளவர்களை பாதுகாத்தல் பொருத்தமானதாக இருக்கும். 

பெண்கள் மிக முக்கியமாக இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுத்துவதற்கு மிக முக்கிய  காரணங்களில் ஒன்று புகைத்தல் ஆகும். 

புகைப்பவர்கள்,  மது அருந்தும் நபர்களை திருமணம் செய்தால் விரைவில்   விதவை ஆக்கப்படுவதுடன் மலடி என்கின்ற பெயரை பெறுவீர்கள். இவை உண்மையான காரணிகள் என  ஆய்வுகள் மூலம் நீரூபிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இளையோர் மத்தியில் உள்ள தவறான அபிப்பிராயங்கள் அவர்களை போதைக்கு அடிமையாக்கின்றது அதாவது மதுபானம் அருந்தினால் அதிகநேரம் விழித்திருந்து படிக்கலாம் என்றும், அழகாக தோற்றமளிக்கலாம் என்று என்று எண்ணுகிறர்கள்.அது தவறானது. மது பாவனை பொருகள் எந்தவொரு காலத்திலும் உடல் ஆராரோக்கியத்துக்கு உகந்ததல்ல.  மேலும் எமது சமுதாயத்தை புலம் பெயர் சமுதாயம் சீரழிக்கிறது என்பதும் மிகவும் கவலைக்குரிய விடயம் ஆகும்.  


முன்னைய காலங்களில் புகைத்தல், மதுபானம் அருந்தும் ஆண்களை பெண்கள் மதிப்பதில்லை. ஆனால் தற்காலத்தில் பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே புகைத்தல் மதுபானம் அருந்துதல் சாதாரண விடயம் ஆகிப்போயிருப்பதால் பெண்களுக்கும் அது சாதாரண விடயமாகி;ப்போயுள்ளது. 

ஆனால் அது பெண்களுக்கு பெரிதும் ஆபத்தாக அமைகிறது. எனவே அவற்றை மிக தெளிவாக பெண்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். 

வாழ்கைத்துணையை தேடி எடுக்கும் போது, மதுபாவனைக்கும் புகைப்பழக்கத்துக்கும் அடிமையானவர்களை தவிரத்து விடுங்கள் 
அவர்களை திருமணம் செய்தால் உங்களுடைய வாழ்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பது உண்மையான விடயம். எந்தவிதமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் சமூகத்தின் மனப்பாங்கில் மாற்றம் வரும் வரைக்கும் போதை பொருட்களை எமது சமூகத்தில் இருந்து ஒழிக்க முடியாது என அவர் மேலும்  தெரிவித்தார்.