ஒலுவில் கிரசன்ட் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

எம்.ஜே.எம்.சஜீத்
ஒலுவில் கிரசன்ட் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று (16) கழகத்தின் தலைவர் எம்.எல்.இக்பால் தலைமையில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இவ் இப்தார் நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சீல், தேசிய காங்கரசின் ஒலுவில் அமைப்பாளர் ஏ.சீ.றியாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.