இப்தார் விருந்தை ரத்து செய்துவிட்டு; பெருநாளுக்கு வாழ்த்து சொல்லும் ட்ரம்ப்.!


அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்லாமியர்களின் திருநாளான ரமலானுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், 'அமெரிக்க மக்கள் சார்பிலும், என் மற்றும் என் மனைவி மெலனியா சார்பிலும் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விடுமுறை நாளில் கருணை, அரவணைப்பு மற்றும் நல்லெண்ணங்கள் வளர்த்துக் கொள்வதை நினைவு கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பில் கிளின்டன் அமெரிக்க அதிபராக இருந்த காலத்திலிருந்து ரம்ஜானின் போது வெள்ளை மாளிகையில், இப்தார் விருந்து நடத்தப்பட்டு வந்தது. ஆனால், ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பின் அந்த நடைமுறையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், முஸ்லிம் நாடுகள் பலவற்றிலிருந்து அந்நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்கும் ட்ரம்ப் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.