Header Ads

ad728
  • Breaking News

    ஜம்மு காஷ்மீரில் பள்ளிக்குள் பதுங்கியுள்ள தீவிரவாதிகள்: பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றிவளைப்பு



    காஷ்மீரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகர் பேருந்து நிலையம் அருகே மத்திய ரிசர்வ் காவல் படையினர் ரோந்து சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆயுதப் படை காவல் துறை உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

    தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடிய தீவிரவாதிகள் அருகில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்குள் சென்று பதுங்கி கொண்டனர். இதையடுத்து பள்ளிக்கூடத்தை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை சரணடையும் படி அறிவுறுத்தினர். ஆனால் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டதால். கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. 

    பள்ளிக்குள் 2 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி உள்ளார்களா பள்ளியில் இருந்த யாரேனும் பிணைகைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய ஆளில்லா குட்டி விமானம் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடத்தில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையால் ஸ்ரீநகரில் பதற்றம் நிலவி வருகிறது. 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728