Jun 5, 2017

உலமாசபை; ஜனாதிபதி,பிரதமரின் ரமழான் இப்தார் பகிஷ்கரிப்புஅஸ்ஸலாமு அலைக்கும் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபைக்கு!

 இலங்கை நாட்டின் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜமிய்யதுள் உலமா சபை, சூரா கவுன்சில் மற்றும் இன்னும் பல இஸ்லாமிய அமைப்புக்கள் பல தடவை இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பதற்காக எடுத்த முயற்சிகள் கானல் நீர்போல் ஆகி விட்டது.  இன்றுவரை நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டு தொடர்கிறது. இது ஒரு தொடர் நாடகமாக அரேங்கேறிக் கொண்டு இருக்கிறது. இதற்க்கு முற்றுப்புள்ள வைக்க வேண்டும் என்றால் நாம் முஸ்லிம்கள் எல்லாம் முதலில் ஒன்று சேர வேண்டும். 
உங்களால் அரசுக்கு எதிராக போர் தொடுக்கவோ, ஆர்பாட்டங்களை நடத்தவோ, இனவாதிகள்போல சர்ச்சைகளை உண்டாக்கவோ தெரியாதும் முடியாதுமான காரியமாகும். அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள், குனூத் ஓதுங்கள் என் மாத்திரம் தான் சொல்ல முடியும். ஆனால், அல்லாஹ் அப்படி சொல்லவில்லை. அல்லாஹ் நாடினால் ஒரு நொடியில் ஞானசார தேரர் உட்பட அனைத்து இனவாதிகளையும், இஸ்ரேல், அமெரிக்கா, மியன்மார் இனவாத தேரர் அசின் விராது இன்னும் பல எதிரிகளையும் அல்லாஹ் ஒரு நொடியில் ஹிதாயத்தை கொடுத்துவிடுவான் (இஸ்லாம் மார்கத்தை ஏற்றுக்கொள்ள செய்வான்). அல்லது ஒரு நொடியில் அழித்தும் விடலாம். அல்லாஹ் இவ்விரண்டையும் அவசரமாக செய்ய மாட்டன். 
ஏன் என்றால் அவன் எங்களுக்கும் உங்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை தந்து இருக்கிறான். அல்லாஹ் எம்மை சோதித்துப் பார்க்கிறான். அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் கீழ்த்தரமாக ஏசியவனுக்கு எதிராக நாம் குறைந்த பட்சம் ஓர் ஆர் பாட்டமோ, ஒரு கண்டன கூட்டமோ, ஒரு எதிர்ப்பையோ நாடளாவிய ரீதியில்  செய்ய முடியாத மௌனிகளாக இருக்கிறோம். எங்களையும் அவன் சோதிக்கின்றான். அவனுக்காக நாம் என்ன பங்களிப்பையோ தியாகங்கலையோ செய்கிறோம் என்று. நாம் உங்களிடம் பாராளுமன்ற பதவியில் இருந்து சொல்லவில்லை. குறைந்த பட்சம் இந்த கஞ்சி கோப்பையை, இப்தாரை பகிஷ்கரியுங்கள் (தியாகம் செய்யுங்கள்) என்று அல்லாஹ்வுக்காக இதையாவது தியாகம் செய்ய முடுயுமா என்று இலங்கை வாழ் முஸ்லிம்கள் உங்களை அவதானித்துக் கொண்டு இருக்கிறார்கள். 
அது மட்டுமல்லாமல், நாடு பூராகவும் இரவு தூங்கி காலையில் எழும்பும்போது ஒரு பள்ளிவாசல் அல்லது ஒரு வணிக நிலையம் தாக்கப்பட்டிருக்கும்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அதற்கு சம்பந்தபட்ட அமைச்சர்கள் ஊடக மாநாடுகளை ஏற்பாடு செய்து முஸ்லிம் பிரதிநிதிகளை அழைத்து, நல்ல தேநீர் உபசாரங்களையும், பதவிகளையும், வெளிநாட்டு சுற்றுலாக்களையும் வழங்கி  முஸ்லிம்களை மாங்காய் மடையர்கள் ஆக்குகிறார்கள். இதை எவ்வளவு காலத்துக்கு முஸ்லிம் இளைஞர்கள் பொறுத்திருப்பார்கள் என அல்லாஹ்வே அறிவான். அன்று துரையப்பா அமிர்த லிங்கம் பிரச்சினைக்கு சரியான முறையில் தீர்வு கண்டிருந்தால் 30 வருட யுத்தத்தை சந்தித்திருக்க மாட்டோம்.   
உலமாக்களே! நீங்கள் இந்த வருடம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இப்தார் நிகழ்ச்சியை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிஷ்கரிக்குமாறும் மற்றும் முஸ்லிம் அனைத்து முஸ்லிம்களுக்கும் பகிஷ்கரிக்குமாரும் பகிரங்கமாகவோ, மறைமுகமாகவோ தடுத்தல் அவசியம்.....................

உங்களில் யாராவது தீமையைக் கண்டால் அதை அவர் தன் கையால் தடுக்கட்டும். அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் அதை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளட்டும். இதுவே ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும்.ஆதாரம் : முஸ்லிம், (1140

ஏன் என்றால் நாம் இவர்கள் போடும் எச்சிலை சாப்பிட்டு அவர்கள் உங்களையும் எங்களையும், “சாப்பாடு மற்றும் பெண்களையும் கொடுத்தால் முஸ்லிம்களிடம் எதையும் சாதிக்கலாம்” என ஒரு பிரபல இனவாத அமைச்சர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அரபு நாடுகளில் இருந்து வந்த அராபிய வியாபாரிகள், சிங்கள பெண்களிடம் காமத்தைத் தீர்க்க பல இலட்சம் பெறுமதியான ஆபரணங்களையும் கொடுத்ததாகவும், அந்த காமத்தில் உருவான வாரிசுகளே இலங்கை முஸ்லிம்கள் எனவும், தனது புத்தகத்தில் எழுத்தியுள்ளார். அது சிங்கள தலைமைத்துவத்தின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.. 

இதனால் நாம்  இந்த வருடம் இப்தாரை பகிஷ்கரித்து முஸ்லிம்களின் பலத்தையும் ஒற்றுமையையும் காட்டி இனவாதிகளுக்கு இந்த அரசு ஒரு முடிவையும் எடுக்காத காரணத்தினால், முஸ்லிம் மக்கள் எங்களை பகிஷ்கரிக்கும் நிலைமைக்கு 

தள்ளப்பட்டு விட்டோம். இதற்கு பிறகு இதைவிடவும் பெரிய முடிவுகளை முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் எடுக்கக் கூடியவர்கள் என அரசாங்கத்தின் மனதில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தும்.  

முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சொந்த லாபத்தை ஒரு புறத்தில் வைத்து ஒரு குடையின் கீழ் இணைய வேண்டும். அகிம்சைபோராட்டத்தில் வெற்றி பெறுவோமாக! உலமாக்களின் கடமை இதை சம்பந்த பட்டவர்களுக்கு எத்திவைப்பதே! இது உங்கள் கடமையாகும். நீங்களும் பக்க சார்பாக நடந்து கொண்டால். அல்லாஹ்விடமும் இலங்கை வாழ் முஸ்லிம்களிடமிருந்து உங்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவீர்கள். மேலும், உலமா சபை இரண்டாக பிளவுபட நீங்களே காரண காரணியாக இருக்க வேண்டாம் என ஆணித்தனமாக கூறுகின்றேம்.

அஸ்ஸலாமு அலைக்கும்
உம்ரா (UMRA), ஐக்கிய முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கம்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post