சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவோம்சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதில் எந்தவித அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணிய மாட்டோம் என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் அடிக்கடி இடம்பெறும் வெள்ளம் தொடர்பில் அவதானமாக இருப்பதற்கும் உரிய தகவல்களை வழங்கும் நோக்கிலும் நிறுவப்படும் தகவல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு நகரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை முகாமைத்துவம் செய்ய கடும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பூங்காக்கள் அமைப்பது போன்றே கழிவு முகாமைத்துவமும், நீர் முகாமைத்துவமும் முக்கியமானது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதன்போது மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.