சிரேஸ்ட அமைச்சர் ஒருவரின் எதிர்ப்பு: எந்த புதிய பதவியும் இன்றி வெளியேறிய அனோமாவெளிவிவகார பிரதி அமைச்சராக அனோமா கமகே நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி இருந்த போதிலும், அவருக்கு அந்த பதவி கிடைக்கவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டள்ளது.

கடந்த புதன்கிழமை மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டது. இதன் போது பிரதி அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.

இருப்பினும், அமைச்சர் தயா கமகேவின் மனைவி அனோமா கமகே வெளிவிவகார பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும் அவருக்கு இறுதி தருணத்தில் அந்த பதவி கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்திருந்த,அனோமா எந்த புதிய பதவியும் இன்றியே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அமைச்சரவையில் உள்ள சிரேஸ்ட அமைச்சர் ஒருவரின் எதிர்ப்பு காரணமாகவே அவர் கடைசி நேரத்தில் பதவியை இழந்துள்ளார் என்றும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. தொடர்ந்தும் பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சராகவே தற்போதும் அனோமா கமகே, பதவி வகிக்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக வசந்த சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்