தொழுகைக்காக நிறுத்திய காரில் தீ – மூன்று வாகனங்கள் முற்றாக சேதம்

கொழும்பு, தெமடகொட பிரதேசத்தில் அமைந்துள்ள அந்தோனியார் சேர்ஜ் இற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளது.
புனித ரமழான் மாதத்தின் 27ஆம் நாள் இரவு நேர மத வழிபாடுகளில் ஈடுபட ஸ்கூள் லேனில் அமைந்துள்ள ACTJ பள்ளிவாசலுக்கு வருகை தந்த நபர் ஒருவரின் காரில் ஏற்பட்ட திடீர் தீயினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகப் பரவிய தீ, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் இரு வாகனங்களுக்குப் பரவியதால் மூன்று வாகனங்களும் தீக்கிரை ஆகியுள்ளது.
இந்தச் சம்பவம் ஒரு நாசகர செயல் அல்ல என பொலிஸாரின் முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.