இனவாதிகளுக்கு சரியான பாடம் கற்பிக்க முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குங்கள்; சேகுநாட்டில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும், பள்ளிவாசல்களும் தாக்கப்படுவதும், காணிகள் அபகரிக்கப்படுவதும் சிலைகள் முளைப்பதும் தினந்தோறும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது, இவை அனைத்தும் அரசின் ஒத்துழைப்புடனே நடைபெற்று வருகிறது என முன்னாள் ஊடக பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் சிலோன் முஸ்லிமிற்கு சற்று முன்னர் தெரிவித்தார்,

சிலோன் முஸ்லிம் டிஜிடல் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு பேட்டியிலேயே இதனை அவர் தெரிவித்தார், மேலும் கருத்துக்களை பகிர்ந்த சேகு,

இனவாதிகளை கட்டுப்படுத்த முஸ்லிம் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து பலத்தை நிரூபித்து தீர்வொன்றிற்காக போராடவேண்டும், நினைத்த விதத்தில் ஆளுக்கொரு கட்சியும் திட்டமும் வகுத்தால் வெற்றியடைய வாய்ப்பே இல்லை, தமழர்கள் ஒன்றிணைந்து இன்று சாதித்து கொண்டிருக்கின்றனர், ஆனால் முஸ்லிம்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம்களுக்கு இன்று சமஷ்டி தீர்வு வேண்டும், அந்த தீர்வில் முஸ்லிம்களுடைய இருப்பு அதிகம் பேசப்படவுண்டும் அதற்காக நாம் பாடுபட வேண்டும் என்றார்.