லண்டன் தீ விபத்தில் பலரது உயிரை காப்பாற்றிய முஸ்லிம்கள்அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

லண்டன் அடுக்குமாடி குடியிறுப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களை முஸ்லிம்கள் உடனடியாக களத்தில் இரங்கி காப்பாற்றியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மேற்கு லண்டனில் உள்ள கிரன்ஃபெல் டவர் எனும் இந்த 27 மாடிக் குடியிருப்பில் 125 குடும்பங்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அங்கு நேற்று அதிகாலை இந்தக் கட்டிடத்தின் 2-வது தளத்தில் தீ பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ கொளுந்துவிட்டு எரிந்தபடி அனைத்து மாடிகளுக்கும் பரவியது.

ரம்ஜான் மாதமாதலால் அருகில் வசித்த முஸ்லிம்கள் உறங்காமல் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அபாய அலாரம் சத்தம் கேட்டு உடனடியாக தீ பரவிய குடியிறுப்புக்குள் புகுந்து அனைவரையும் எழுப்பி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு, தண்ணீர், உடை ஆகிவை கொடுத்தும் உதவி புரிந்துள்ளனர்.

இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப் பட்டது எனினும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.