கிழக்கு முதலமைச்சர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் ஆகியோருக்கிடையில் சந்திப்புகிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பத்தாஹ் காஸிம் அல் முல்லாஹ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

நேற்று பிற்பகல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதரகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன,

தற்போது இலங்கையில் முஸ்லிங்கள் எதிர்நோக்கி வரும் அச்ச நிலைமை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன் போது  ஐக்கிய அரபு  இராச்சியத் தூதுவரிடம் விரிவாக எடுத்துரைத்தார்,

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புக்களையும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது