Home » » காத்தான்குடி ஜாமிய்யதுல் பலாஹ் அரபுக் கல்லூரிக்கு கிழக்கு முதலமைச்சர் நிதி வழங்கி வைப்பு

காத்தான்குடி ஜாமிய்யதுல் பலாஹ் அரபுக் கல்லூரிக்கு கிழக்கு முதலமைச்சர் நிதி வழங்கி வைப்பு

Written By Ceylon Muslim on Wednesday, June 21, 2017 | 4:35:00 PM



அண்மையில் #ஹாபிழ்கள்_ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட அல்குர்ஆன் மனனப் போட்டி #காத்தான்குடி_ஜாமிஅதுல்_பலாஹ் அரபுக்கல்லூரியின் மனன பீடத்தில் அமைந்துள்ள ‘’#மர்ஹூம்_ஷைகுல்_பலாஹ்’’ மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக ஹாபிழ்கள் ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவரும், கிழக்குமாகாண முதலமைச்சரும், ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் பழைய மாணவருமான அல்ஹாபிழ் ZA. #நசீர்அஹமட் கலந்துகொண்டார்.
அந்நிகழ்வின் போது ஜாமியாவின் நிருவாகத்தினரால் மனனபீட கட்டட புனரமைப்புக்கான தேவைபற்றி கௌரவ முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோது அதற்கான செலவுத்தொகையான ரூபாய் 1,000,000/- (பத்து இலட்சத்தை) ஹாபிழ்கள் ஒன்றியத்தின் சார்பாக தான் வழங்குவதாக வாக்களித்திருந்தார்.
அல்ஹம்துலில்லாஹ்... அதன்படி நேற்று (18.06.2017/ஞாயிற்றுக்கிழமை) மதியம் ஏறாவூர் ‘’குல்லிய்யத்து தாரில் உலூம்’’ அரபுக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வின்போது ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் உஸ்தாதுகள், மற்றும் நிருவாக உறுப்பினர்களிடம் குறித்த ரூபாய் 1,000,000/- (பத்து இலட்சம்) நிதி கௌரவ முதலமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment