இலங்கை மற்றும் இந்திய அகதிகள் இனி அவுஸ்திரேலியா செல்லத்தடை


இலங்கை மற்றும் இந்திய அகதிகள் அவுஸ்திரேலியாவிற்கு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு படைப் பிரிவின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு கண்காணிப்பு கப்பலான ஓசியன் சீல்ட், கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. அந்த கப்பலில் வந்த அதிகாரிகள், ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான தகவல்களை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்காதிருப்பதை தடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மேற்கொள்ளவுள்ளது.