கட்டாரிலுள்ள தனது இராணுவத் தளத்தை மூடுவதற்கு வந்த அழைப்பை துருக்கி நிராகரிப்பு


கட்டாரிலுள்ள தனது இராணுவத் தளத்தை மூடுவதற்கு நான்கு அரபு நாடுகளிடமிருந்து வந்த அழைப்பை துருக்கி நிராகரித்துள்ளது.
இந்த இராணுவத் தளம் வளைகுடாவில் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக இருப்பதாகவும், இந்த மூடுதலுக்கான கோரிக்கையானது டோஹாவுடனான அதன் உறவுகளில் குறுக்கிடுவதாகவும் துருக்கி சுட்டிக்காட்டியுள்ளது.
2014 ஆம் ஆண்டு கட்டாருடன் மேற்கொண்ட உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்வதற்கான எந்த திட்டமும் இல்லை என துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் பிக்ரி ஐஸிக் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா உள்ளிட்ட நான்கு நாடுகள் கட்டார் மீதான தடையை நீக்க 13 கோரிக்கைகளை நிபந்தனையாக விதித்துள்ளன. இந்த 13 கோரிக்கைகளில், கட்டாரிலுள்ள துருக்கியின் இராணுவ தளத்தையும் உடனடியாக மூடவேண்டுமெனவும் நிபந்தனை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது