தபால் ஊழியர்களின் வேலைத்திறுத்தத்தால் மலையக தபால் சேவைகள் பாதிப்பு(க.கிஷாந்தன்)

26.06.2017 அன்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தினால் 27.06.2017 அன்று மலையக தபால் சேவைகள் பாதிப்புக்குள்ளாகின.

தற்போது உயர் தரம் சித்திபெற்ற மாணவர்களது பல்கலைக்கழக அனுமதி கடிதங்கள் பல்கலைகழக மாணிய ஆணைக்குழுவினால் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கும் மாபொல புலமை பரிசில் கடிதங்கள் போன்றன தேங்கும் நிலை காணப்படுவதனால் பல்கலைகழகத்திற்கு தெரிவானவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன. இதனால் பல்கலைகழக பிரவேசம் தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வேலை நிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர உடனே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.