பாடாசாலையின் பிரச்சினைகளை கேட்டறியும் அமைச்சர் நஸீர்சப்னி அஹமட்

அட்டாளைச்சேனை, மீனோடைக்கட்டு ஜலால்தீன் வித்தியாலயத்தின் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடலும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் புதிய மேலதிக இடத்திற்கான பார்வையிடலும் நேற்று (03) இடம்பெற்றது.

பாடசாலையின் ஆசிரியர் பிரச்சினைகள், மாணவர்களுக்கான வளப்பற்றக்குறை போன்றவை ஆராய்ப்பட்டு அதற்கான தீர்வுகளை முன்னெடுப்பதற்காக ஆராய்ப்பட்டதுடன், சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்கு தேவையான இடம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவும், அங்கு புதிய கட்டிடம் ஒன்றையும் அமைப்பதற்கான ஆராய்வுகளும் அங்கு அமைச்சர் தலைமையில் ஆராய்ப்பட்டது. 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர் ஹாசீம், பாட்சாலையின் அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், சுகாதார அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ. நச்யீ என பலரும் கலந்துகொண்டனர்.