அல்-இபாதா கலாசார மன்றத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும், பரிசளிப்பு வைபவமும்( எம்.ஜே.எம்.சஜீத்)

அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் 6வது வருட இப்தார் நிகழ்வும், பரிசளிப்பு வைபவமும் கலாசார மன்றத்தின் ஹதிஸ் மஜ்லிஸ் தலைவர் மௌலவி ஐ.எல்.சப்ரி தலைமையில் நேற்று (21) அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட உலமாக்கள், அரச உயர் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 20நாட்களாக அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தினால் நடாத்தப்பட்ட ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடைகளை எழுதி தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும் இதன்போது பணப்பரிசு மற்றும் ஆறுதல் பரிசுகள், சான்றுதழ்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.

 அல்-இபாதா கலாசார மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர்களாக இருந்து சமூகப் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயற்படும் உறுப்பினர்கள் பலரும் இதன்போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.