விரிவுரையாளர்கள் சம்பந்தமாக ஓட்டமாவடி சிறாஜியா அறபு கல்லூரி விடுக்கும் வேண்டுகோள்ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.

வீடியோ : - www.youtube.com/watch?v=miZXqzedmdU&feature=youtu.be
ஓட்டமாவடி சிறாஜியா அறபு கல்லூரியானது கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ளது. 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த கல்லூரியானது கல்குடா பிரதேசத்தில் மட்டுமல்லாது இலங்கையின் நாளா புறத்திலும் நன்மதிப்பினை பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இங்கு ஷரீஆ, மற்றும் ஹிப்ழுப்பிரிவுகள் என இரு துறைகள் உள்ளன. இதில் சுமார் 300இற்கும் உட்பட்ட மாணவர்கள் முழு நேரமாக  கல்வி கற்கின்றனர். அதே நேரம் பொதுப்பாடவிதான பாடங்களும் பகுதி நேரமாக கற்பிக்கப்பட்டு மாணவர்கள் ஓ.எல். வகுப்புக்களுக்கு தயார் படுத்தப்பட்டுகின்றனர். இதே போன்று தொழில் நுட்ப பாடங்களும் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டு வருகின்றது.

எனவே குறித்த அறபு கல்லூரியில் பத்து விரிவுரையாளர்கள் தற்பொழுது கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குறித்த சிறாஜியா அறபு கல்லூரிக்கு விரிவுரையாளர்கள் இருவர் அவசர தேவை காரணமாக இணைத்துக்கொள்ள உள்ளதினால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களும் கோரப்படுகின்றது.

தெரிவு செய்யப்படும் விரிவுரையாளர்கள் இருவரும் பின்வரும் பொறுப்புக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் முழு நேர விரிவுரையாளராகவும் பகுதி நேர விரிவுரையாளராகவும் நியமிக்கப்படுவர். மற்றையவர் முழு நேர விரிவுரையாளராகவும், பகுதி நேர நிருவாக உத்தியோகத்தராகவும், நியமிக்கப்படுவார்.

எனவே தகுதியானவர்களை உடன் விண்ணப்பிக்குமாறு பொதுச் செயலாளர் கபீர் ஆசிரியர் கேட்டுக்கொள்ளும் அதே இட்சத்தில் தொடர்புகளுக்கு சிறாஜியா அறபு கல்லூரியின் ஓட்டமாவடி என்ற விலாசத்தில் பொது செயலாளருடைய தொலை பேசி இலக்கங்களான 065.2257308 மற்றும் 0773950474 உடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுகொள்ளப்படுகின்றனர்.