செம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் விளையாட உபுல் தரங்கவிற்கு தடைசெம்பியன்ஸ் தொடரின் நேற்றைய போட்டியின் போது, இலங்கை அணியை 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தென் ஆப்பிரக்கா வெற்றி பெற்றுது.

இலங்கை அணி பந்து வீசுதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கூறி அணியின் தலைவர், உபுல் தரங்கவிற்கு 2 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

50 ஓவர்கள் வீசுவதற்கு இலங்கை அணி 4 மணித்தியாலங்கள் எடுத்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலே மெத்தியூஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் அணியின் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.