சீரற்ற காலநிலையால் கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது - பிரதான வீதியும் தாழிறக்கம்(க.கிஷாந்தன்)

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரகாமுள்ள பகுதியில் வர்த்தக நிலையத்தினூடான கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.

07.06.2017 அன்று அதிகாலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிராபத்துக்கள் எதுவும் இல்லாத நிலையில் அக்குடியிருப்பாளர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட சீரற்ற காநிலை தொடர்ந்தும் நிலவுகின்றது. இந்த நிலையில் பேரகாமுள்ள பகுதியில் மண்சரிவுகள் ஏற்படும் அச்சத்தினால் 2 குடும்பங்களை சேர்ந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வர்த்தக தொகுதி ஊடாக குறித்த கட்டிடம் சரிந்து விழுந்ததில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் பேரகாமுள்ளையில் நிலம் தாழிறங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இவ்வீதியினூடான போக்குவரத்து இரு வழி போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மாற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அபப்குதியினை ஆராய்ச்சி செய்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சென்றுள்ளமையும், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்பகமுவ பிரதேச இடர் முகாமைத்துவ பிரிவினரும் சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.