Jun 7, 2017

கொள்கை வெறியர்களால் குறிவைக்கப்படும் கட்டார்மத்திய கிழக்கின் வேகமான பொருளாதார வளர்ச்சியும் அதிகமான ஆசியநாட்டவரின் தொழில் மையமாக கட்டார் விழங்குகிறது. சுமார் 2675522 மக்கள் தொகையை கொண்டது.2010 ம் ஆண்டைவிட சுமார் அரைமடங்கு மக்கள் குடியேற்றத்தை வேகமாக 2017ல அதிகரித்துள்ளது.இதில் சுமார் 82% மானவர்கள் வெளிநாட்டவர்கள்.

குறிப்பாக
> 26.7% -இந்தியர்
> 18.1% -கட்டார் பூர்வீகள்
> 11.9% -வங்களாதேஷ்
> 6.8%- இலங்கையர்
> 5.6%-பாகிஸ்தான்
> 40.7%-ஏனையநாட்டவர்கள்
> வாழ்கின்றனர்.இலங்கையர் சுமார் 125000பேர் தற்போது பல்வேறு துறைகளில் தொழில் புரிகின்றனர்.

 கடந்தவருட பொருளாதார வருமானமாக சுமார் 170.15பில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளது.பெற்றொலியம்,கப்பல்கட்டுமானம்,கட்டிடத்தொழில்,இரும்பு,உருக்கு,உயர்தரவாயு மற்றும் உரம் என்பன முக்கிய வருமான மூலமாக உள்ளது.இவர்கள் அதிகமான தென்கொரியா,யப்பான் மற்றும் சீனாவிற்கு சுமார் 78% உற்பத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஏனைய மத்தியகிழக்கு நாடுகளுக்கு 9% உற்பத்திகள் மட்டுமே ஏற்றுமதியாகிறது.

அதேநேரம் இறக்குமதியில் 14%மட்டுமே அமெரிக்காவின் பங்கு உள்ளது.சுமார் 56% மானவை ஐரோப்பிய நாடுகளில் இருந்தே இறக்குமதியாகிறது.அதிகமாக உணவுப் பொருட்கள்,மருத்துவ பொருட்கள் மற்றும் இயந்திர உபகரணங்களே இறக்குமதியாகின்றது.கடந்தவருடம் மட்டும் சுமர் 38 பில்லியன் அமெரிக்க டொலர் இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது.

அரேபிய நாடுகள்,முதலாளித்துவ மற்றும் சோசலீச நாடுகளுடனும் மிகவும் நெருக்கமான வெளிஉறவுக் கொள்கையை முன்னெடுத்து வேகமாக வளர்ச்சி கண்ட பெருமைக்குறிய நாடு.

குறிப்பாக ஈராக்,சிரியா மற்றும் லிபியா மீதான தாக்குதல்கள் மற்றும் போர்நடவடிக்கையில் அமெரிக்க சார்புக் கொள்கையை அணுசரித்தது.அத்துடன் அமெரிக்காவின் இராணுவ செயற்பாடுகளுக்கு தளமாகவும் இருந்தது.

Saudi Arabia, Egypt, Bahrain, the United Arab Emirates, Libya, Yemen மற்றும் Maldives நாடுகள் தற்போது வெளிஉறவு தொடர்புகள் துண்டித்துள்ளது.இது 2.7மில்லியன் தொகையுடைய சிறிய மற்றும் பலமான நாட்டை எந்தளவு பாதிக்கும் என்பதே கேள்விக்குறி??

மேற்குறிப்பிட்ட சனத்தொகை மற்றும் பொருளாதார தரவுகளின்படி கட்டார் மீதான அழுத்தம் வெளிநாடுகளையும்,வெளிநாட்டவரையுமே அதிகம் பாதிக்கும்.ஈராக்,சிரியா மற்றும் லிபியா போன்ற நாடுகளைப் போல அல்லாது கட்டாரின் உள்ளக மற்றும் வெளியக கட்டமைப்பு வேறுபட்டது.

இந்த நிலையில் கட்டார்விமானசேவை,அல்ஜெஸீரா ஊடகம் மற்றும் 2022ல் நடைபெறவுள்ள உலககோப்பைக்கான உதைப்பந்தாட்டம் என்பனவற்றுடன் உலகவலையமைப்பான skyline போன்றன உடனடியான தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது.பங்குச்சந்தை 4%சரிவினையே காட்டுகிறது.

ஆரம்பகாலம் முதல் கட்டாருக்கும் அயல்முஸ்லீம் நாடுகளுக்கிடையேயும் முறுகல் நிலை தொடர்ந்த வண்ணமே இருந்தது.அதில் முக்கியமானவை

1-Hawar தீவு தொடர்பில் பஹ்ரய்னுடன் வருடக்கணக்கில் இழுபறி.2001சர்வதேச நீதிமன்றம் வரை சென்றது.
2-September 1992கட்டார்-சவுதி எல்லையில் 3 நபர்கள் படுகொலை
3-1994 யமன் உள்நாட்டு போரில் சவுதிக்கு எதிரான கட்டார் நிலைப்பாடு
4-1995 GCC மகாநாட்டில் சவுதிசார்பான செயலாளர் நியமனத்தை எதிர்த்தது.மற்றும் கட்டார் மகாநாட்டை விட்டு வெளியேறியது.
5-1996&2005 சவுதி மன்னருக்கு எதிரான உள்நாட்டு சதிப்புரட்சிக்கு கட்டார் துணைபோனது.

இந்த நிலையில் 2013 ம் ஆண்டு கட்டார் மன்னர் தனது 3 வயது நிரம்பிய மகள் Emir Taminஇடம் ஆட்சியை ஒப்படைத்தார்.பல்வேறு சர்வதேச நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட புதிய மன்னர் சர்வதேச உறவுகளை பலப்படுத்துவதில் ஆர்வம்கட்டினார்.குறிப்பாக GCC உடன்படுக்கையில் கட்டார் கைச்சாத்திட மறுத்ததால் March 2014ல் தற்போது போன்ற நிலை உருவானது.பலநாடுகள் உறவுகளை கட்டாருடன் நிறுத்திக் கொண்டது.

தற்போதைய பிரச்சனை பூதாகாரமாகியதற்கு முக்காய காரணம்..டிசம்பர் 2015ல் ஈராக்கில் இயங்கும் ஹிஸ்புள்ளா ஆயுதக்குழுவால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள கட்டார் அரசகுடும்பத்தினர் 26நபர்கள் விடயமாகும்.இவர்களை விடுவிப்பதற்கான சகல நடவடுக்கைகளும் ஈரானின் அனுசரனையுடன் பூர்த்தியடைந்துள்ளது.இதற்காக இவர்களுக்கு 500மில்லியன் அமெரிக்க டாலர் கட்டாரால் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்தப்பணம் தனது அரசாங்கத்துக்கு தெறியாமல் முறையற்ற பயஙகரவாதத்தை ஊக்குவிப்பராக ஈராக் அரசு அமெரிக்கா மற்றும் சவுதியிடம் முறையிட்டது.இதுதான் பிரச்சனை பூதாகரமாக வெடிக்க முக்கிய காரணமாகும்.

இங்கு முக்கியமாக ஷீஆக் கொள்கையாளர்களுடன் கட்டார் கைகோர்த்ததே மற்றைய அரபுநாடுகளை சீற்றம் கொண்டது.மத்தியகிழக்கில் ஷீயா மற்றும் சுன்னி முஸ்லீம்களிடையே நடக்கின்ற ஆயுதப்போராட்டம் இன்று சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது.இந்த கொலைவெறி கொண்ட ஷீஆக் கொள்கையுடைய இஸ்லாமிய கிலாபத் தீவிரவாதக் குழு அமெரிக்கா உற்பட சர்வதேச நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

பலஸ்தீனம் மற்றும் முஸ்லீம் நாடுகளில் இயங்கும் சுன்னிப் பிரிவினருக்கு கட்டார் பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றது உலகறிந்த உண்மை.இருந்தும் கடந்த 2வருடங்களாக சிறைக் கைதிகளாக இருக்கின்ற கட்டார் நெருங்கிய அரசகுடும்ப உறுப்பினர்களை மீட்பது கட்டார் அரசாங்கத்தின் தார்மீகக் கடமையாகும்.

அதற்காக ஈரானின் துணையை நாடுவதால் கட்டாரை ஷீஆக் கொள்கை ஆதரவான நாடாக சீல்குத்த முடியாது. அடுத்து அமெரிக்க புதிய ஜனாதிபதி Donald Trump ன் மத்தியகிழக்கு விஜயம் பலகேள்விகளை எழுப்பிவருகிறது.குறிப்பாக சிரியாவிற்கு அடுத்ததாக மத்திய கிழக்கில் தமது ஆயுத விற்பனைக்கான சந்தர்ப்ப சூழ்நிலையை அமெரிக்கா காய்நகர்த்த காத்திருந்தது.

அதேநேரம் துருக்கியில் 2017 நடந்த மக்கள் கணிப்பு வாக்களிப்பில் வெற்றியீட்டடய புதிய ஜனாதிபதி Tayyip Erdoğan செயற்பாடுகள் மாற்றம்கண்டுள்ளது. குறிப்பாக மத்தியகிழக்கு நாடுகளை தனது முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான சர்வாதிகார நகர்வுகளை ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் ஷீஆக்களுக்கு எதிரான கொள்கைகளுக்கு தலமைதாங்கும் நாடாக தன்னை நிரூபிக்க முயற்சிக்கிறார்.இதற்காக கட்டாரின் ஈரானுடனான தொடர்பை துருக்கி தனக்கு சந்தர்ப்பமாக்கி சவுதியை தூண்டிவிட்டுள்ளது.

அதேநேரம் அண்மையில் கைச்சாத்தான சவுதி-அமெரிக்க இராணுவ ஒப்பந்தம் பல இஸ்லாமிய நாடுகளை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.இதனால் பலநாடுகள் சவுதி அரேபியாவின் கட்டாருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

ஆகவே நவீன பொருளாதார கொள்கைகள் மற்றும் மதச்சார்பு கொள்கைகளுக்கு இடையில் நடக்கின்ற பனிப்போரில் கட்டார் பழியாக்கப்பட முயற்சிக்கப்படுகிறது.அமெரிக்கா சார்பாக கட்டார் இருந்த போதும் அமெரிக்காவின் சரண்டல் கொள்கைக்காக கட்டாரை சிக்கவைக்க சதி அரங்கேற்றப்படுகிறது.

குறிப்பாக பல எதிரிகள் சேர்ந்து அமைத்துள்ள தற்காலிக நட்புக் கூட்டாளிகளுக்கு கட்டாரை அடிபணய வைக்கவேண்டும்.இதற்காகவே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.கட்டாருக்கு இதுபுதியதாக இல்லாவிட்டாலும் அதன்வடிவம் புதிய கோணத்தில் உருவாகியுள்ளது கவனிக்க வேண்டியதே.

இந்த நிலையில் கட்டார் அரசாங்கம் தனது வெளியுறவுக் கொள்கையில் சடுதியான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.ஆகவே கொள்கைக்கான கருத்து மோதல்களால் அங்கு தொழில் புரிபவர்களுக்கு உடனடியான எந்த பிரச்சனைகளும் இல்லை.இருந்தும் இந்தப் பிரச்சனை நீடிப்பது மோசமான விளைவுகளை ஏறறபடுத்தலாம்.

By:
 Fahmy Mohamed
 MPhil,LLB(Hons)Solicitor &
 Political & Human Rights Researcher
 UK
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post