இலங்கை மக்களுக்கு கட்டார் தூதரகத்தின் வேண்டுகோள்கட்டாரின் தற்போதைய நிலைமை காரணமாக இலங்கையிலிருந்து மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து கட்டாரில் தொழில் புரிவோரின் அன்றாட வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டில்லை என இலங்கையில் உள்ள கட்டார் தூதரகம் அறிவித்துள்ளது.
அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுக்க கட்டார் அரசு நீண்டகாலமாக தயாராக இருப்பதால் இந்த நிலையை கட்டார் அரசு தற்பொழுது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக கட்டார் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டாரில் பொருளாதார நடவடிக்கைள் மற்றும் உணவு விநியோக நடவடிக்கைகள் என்பவற்றுக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டில்லை என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கட்டார் அரசுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அழுத்தத்துக்கு முகங்கொடுக்க தேவையான அனைத்து வளங்களும் கட்டாரிடம் இருப்பதாகவும் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சில ஊடகங்களில் வரும் தகவல்களை கொண்டு பிழையான வழியில் வழிநடத்தப்பட்ட வேண்டாம் என இலங்கையில் உள்ள கட்டார் தூதரகம் இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 05 ஆம் திகதி முதல் சவூதி அரேபியா, டுபாய், பஹ்ரைன் மற்றும் எகிப்து போன்ற நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.