அட்டனில் தீர்க்கப்பட்ட குப்பை பிரச்சினை பத்தனையில் ஆரம்பம்


(க.கிஷாந்தன்)

அட்டன் டிக்கோயா நகர சபைக்;கு பிரதேசத்தில் கடந்த 17 நாட்களாக எடுக்கப்படாத குப்பைக்கு எதிர்ப்பு தெரிவித்து 15.06.2017 அன்று காலை அட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அதனை  தொடர்ந்து அவ்விடத்திற்கு வருகை தந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் பத்தனை பகுதியில் அட்டன் குப்பைகளை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் 15.06.2017 அன்றைய தினம் அட்டனில் உள்ள சகல குப்பைகளும் அகற்றுவதாக தெரிவித்ததையடுத்து நான்கு உழவு இயந்திர குப்பைகள் பத்தனை பகுதிக்கு கொண்டு சென்ற போது பத்தனை பிரதேச மக்கள் வீதியினை மறித்து தடுத்து நிறுத்தினர் இதனால் அட்டனில் தீர்க்கப்பட்;ட குப்பை பிரச்சினை பத்தனையில் ஆரம்பமாகின.

அதனை தொடர்ந்து இரண்டு உழவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அட்டனிலிந்து கொண்டு வந்த குப்பைகளை மாத்திரம் கொட்டுவதற்கு இடமளிக்குமாறு கேட்டுகொண்ட போதும் அவர்கள் இதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

இந்த குப்பை பிரச்சினை தொடர்பாக பத்தனை மக்களுடன் கலந்துரையாடி தீர்த்து கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்ததையடுத்து அங்கிருந்து குப்பை டிரக்டர்கள் கொண்டு செல்லப்பட்டன.

எனினும் 16.06.2017 அன்று காலை இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.