கொரியா பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் அட்டாளைச்சேனை மிப்ரான்
( ஏ.ஜ.ஹஸ்ஸான் அஹமத்)

எதிர்வரும் (ஜூன் மாதம்) 26ஆம், 27ஆம் திகதிகளில் கொரியா இடம்பெறவுள்ள கொரியா பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குகொள்வதற்காக இலங்கை வீரர்கள் 5 பேர் அந்நாட்டிற்கு நேற்று (23) பயணமாகியுள்ளனர்.


இச் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபெறும் இலங்கைக் குழாமில் கிழக்கு மாகாணத்தின் அட்டாளைச்சேனையை   சேர்ந்த நீளம் பாய்தல் (Long Jump) வீரரான மொஹமட் மிப்ரான் இலங்கை அணியில்இணைக்கப்பட்டிருக்கின்றார். கடந்த ஆண்டின் சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதினை பெற்ற இவர்  , அண்மையில் இடம்பெற்றஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளில் இரண்டாம்இடத்தையும் பெற்றார்.  தொடர்ச்சியான சிறந்த பயிற்சிகளுடன் உள்ள மிப்ரான் இத் தொடரில் தனது சிறந்த திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின்  பழைய மாணவராவார். இவரின் ஆரம்ப கால பயிற்றுவிப்பாளர்களாக அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்களான
M.A.G.பிர்னாஸ், M.I.சிமாலைன், அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர் S.L தாஜீதின் ஆகியோர்களாகும்.

இலங்கையிலிருந்து பங்குகொள்ளும் வீரர்கள் குழாம், கொரியா நாட்டில் சாதனைகள் புரிய அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டு கழகம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.