பும்ரா வீசிய நோபாலை வைத்து விழிப்புணர்வு செய்த போக்குவரத்து பொலிஸார்

செம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வியடைந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய பந்தில், பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஃபாக்தர் சமான், விக்கெட் காப்பாளர் தோனியிடம் பிடிகொடுத்தார். பும்ராவோ, ஆனால் அந்தப்பந்து நோ-பால் என போட்டி நடுவரினால் அறிவிக்கப்பட்டதால், ஒட்டுமொத்த போட்டியின் போக்கே மாறிப்போனது. ஒருநாள் போட்டியில் முதல் சதமடித்த அவர், 111 ஓட்டங்கள் எடுத்த பின்னரே ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு 338 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்க, ஜமானின் சதமும் உதவியாக இருந்தது. பும்ரா மட்டும் நோபால் வீசாமல் இருந்திருந்தால், ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும். சரி, அதற்கு இப்போ என்ன என்கிறீர்களா..? பும்ரா நோபால் வீசும் புகைப்படத்தைப் பயன்டுத்தி, ஜெய்ப்பூர் போலீஸ் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றின் ஈடுபட்டுவருகிறது.

அதாவது, பும்ரா நோபால் வீசும் படத்தையும், சாலையில் கறுப்பு வெள்ளைக் கோட்டைத் தாண்டாமல் நிற்கும் கார்களின் புகைப்படத்தையும் இணைத்து மீம் உருவாக்கி, 'லைனைக் கடந்தால் கொடுக்கும் விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும்'  என்று சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளது. அந்த மீம், வைரலாகியுள்ளது. 

இந்த நடவடிக்கை சம்பந்தமான அதிருப்தியை பும்ரா தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டக்ரேம் கணக்கில் வெளியிட்டுள்ளார். 

இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் இளைஞர்களின் எண்ணிக்கைதான் அதிகம். கவரும் வகையில் கிரியேட்டிவ்வாக ஒரு விஷயத்தைச் சொன்னால், அந்த விஷயம் எளிதில் அவர்களிடம் போய்ச்சேரும். 

விழிப்புணர்வு வாசகங்களை வெறுமனே எழுத்து வடிவத்திலோ அல்லது புகைப்பட வடிவத்திலோ அளிப்பதைவிட மீம், GIF, வீடியோ போன்ற வடிவங்களில் அளிப்பதற்கு கை மேல் பலன் கிடைக்கும். 

இந்த மாற்றத்தினைப் புரிந்துகொண்டுள்ள அரசுத்துறைகள், சோஷியல் மீடியாக்கள் மூலம் இளைஞர்களுக்கேற்ப தங்களின்  பிரசார வடிவத்தை மாற்றியுள்ளன.

ஹசீம் முஹம்மட் நளீம்