ஈசி கேஸ் மூலம் மோசடி செய்த இளைஞர்கள் கைது


ஈசி கேஸ் மூலம் ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் காவற்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய கரம்ப – பாலவி பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த போது நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 மற்றும் 26 வயதான இந்த இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து 8 கையடக்க தொலைபேசிகளும், 18 சிம்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.