Jun 27, 2017

இலக்கு அற்ற முஸ்லீம் சமூகம்நிதானமான அரசியல் வழிமுறை, தூர நோக்கு சிந்தனை மூலம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கமுடியும் என்ற திடமான நம்பிக்கையுடன் நாம் செயற்பட வேண்டும் . அது தன்மானத்தை விட்டுக் கொடுப்பது என அர்த்தப்படாது. இணக்க அரசியல் வழிமுறைகளுக்கூடாகவே இன்று உலகில் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட்டிருக்கின்றன.  அதையே உலக வரலாறுகளும் வலியுறுத்தி நிற்கின்றன. அதற்காக எமது உரிமைகளை  எள்ளள வேனும் விட்டுக்கொடுக்கக் கூடாது .
 
 எனவே நாங்கள் அனைவரும் எமது மக்களின் அபிலாசைகளைத் தீர்க்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் செயற்பட வேண்டுமாக இருந்தால் வலுவான ஒரு பலத்துடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். வெறும் வார்த்தைகளால், வீராப்பு பேச்சுகளால் மக்களின் உரிமைகள் கிடைக்கப் போவதில்லை. நாங்கள் அனைவரும்  தூர நோக்கு சிந்தனைகளோடு செயற்பட வேண்டும்
 
தற்போது புழுதி கிளப்பும் அரசியல் கள நிலையில் சிறு பான்மையினர் எவ்வாறு பாராளும் மன்றத்தில் கர்சித்தாலும் அது நடக்கப் போற காரியம் இல்லை என்பது மக்களுக்கு புரிய வேண்டும். இவ்வாறான சிறு பான்மையினரின் கோரிக்கைகள் முழு சமூக பலத்துடன் அணுகினால் தவிர அது கிடைப்பது அரிது. பத்து உறுப்பினர் பெற்றாலும் எதிர்கால அரசியல் அமைப்பை நோக்கும் இடத்து பெரும் பான்மை அரசை அசைக்க முடியாத தன்மைதான் இருக்கும். அது மட்டும் அல்ல ஒரு சிறு பான்மை கோரிக்கைக்கு மற்ற சிறுபான்மை தோல் கொடுக்காது விட்டால் கோரிக்கைகள் பேச்சு அளவில்தான் முடிவு அடையும். ஏன் எனில் இலங்கையில் சமூகங்கள் வாழும் பூ கோள அமைப்பு பின்னப் பட்ட ஒன்றாகவுள்ளது
 
 
வேறுபட்ட கலை கலாச்சாரங்களையும் வாழ்க்கை முறையையும் பின்பற்றினாலும் பல்லின மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் பழக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். தேசப்பற்று, ஒற்றுமை, தேசியவாதம் மற்றும் நாட்டின் மீது பற்று போன்ற சிறந்த குணங்கள் மக்களின் மனதில் பதியப் பட வேண்டும். சமூக நீதி எல்லா இலங்கை மக்களுக்கும் முடிந்த வரையில் உதவிகளும் வசதிகளும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு இலங்கையரும், தன் இனம், தன் மதம் என்ற போக்கை விடுத்து பிற இனத்தவருக்கு உதவ முன் வர வேண்டும். இந்த சம உரிமையைக் கருத்தில் கொண்டு எவரும் தேசிய ஒருமைப்பாட்டைச் சீர்குளைக்கும் வகையில் கேட்கக் கூடா து.
 
 இலங்கையில் இனவாதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்கள் குழுக்களாக பிரிந்து செயல் படுகின்றனர். ஒருமித்த தேசிய நோக்கு என்பது தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. தலைவர்களும், மக்கள் பிரிதிநிதிகளும் இதுபற்றி பேசிக்கொண்டே இருக்கின்றனரே தவிர ஆக்ககரமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை.
 
ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் முஸ்லீம்  சமூதாயத்தில் ஏற்பட வேண்டும், அடிமட்ட குடிமகன்கள் முதல் மேல்வர்க்க மக்கள் வரை அனைவருக்குமான ஒரு அரசியல் விழிப்புணர்ச்சி மூலம் மட்டுமே அது சாத்தியம். இதற்கான தொலைநோக்கு பார்வை கொண்ட  ஒருங்கிணைந்த ஒரு இயக்கம் உருவாக வேண்டும், ஓர் அணியில் திரட்டி ஒர் அரசியல் புரட்சியை அது ஏற்படுத்த வேண்டும். இங்கு பெரும்பாலான இளைஞர்கள் கொள்கை பிடிப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். வாழ்க்கையை குறித்த நோக்கமும், தொட வேண்டிய இலக்கும், அதை நோக்கிய பயணமும் உள்ளவர்கள் லட்சியவாதிகளாக  கரு தப்படுகிறார்கள்.லட்சியம் என்பது முதிர்ந்த வயதையும், அது பெற்ற அனுபவத்தையும் வெளிகாட்டுவதல்ல. அது வளரும் போதே வாய்ப்பாடாக மனதில் தொற்றிக் கொள்வது.லட்சியம் எதைப் பற்றியாவது இருக்கலாம் ஆனால் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். இவ்வாறு தேசிய ஜனநாயக மணித் உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா தட் கால அரசிய நிலை பற்றி கூறினார் 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network