நோன்பை மதிக்கும் சிங்கள முச்சக்கரவண்டி சாரதிஇன்று இனவாதம் தலைதூக்கி காணப்படும் நிலையில் பௌத்தர்கள் முஸ்லிம்களையும் முஸ்லிம்கள் பௌத்தர்களையும் விரோதியாக பார்க்கின்ற இந்த காலத்தில் இன்று நடந்திருக்கும் சம்பவம் இரு சமூகத்தின் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

இன்று பேருவளையில் முஸ்லிம் சகோதரர் சிங்கள சகோதரரின் முச்சக்கரவண்டியில் பயணித்த கொண்டிருக்கும் போது சிங்கள சகோதரரான ஜகத் புகைப்பிடித்திருந்தவேளை திடீர் என திரும்பி முஸ்லிம் சகோதரரைப் பார்த்து “நீங்கள் நோன்பு நோற்றுள்ளீரா?” என கேட்க முஸ்லிம் சகோதரர் ஆம் என பதிலளித்தள்ளார். 

இதற்கு திடீரென சிங்கள சகோதரர் தனது முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு “நீங்கள் முச்சக்கரவண்டிக்குள் அமர்ந்திருங்கள் நான் வெளியில் இறங்கி புகைப் பிடித்த விட்ட வருகிறேன்” என கூறியுள்ளார். வெப்பம் அதிகமாக இருந்த அந்த வேளையில் கூட அவர் வெளியில் சென்று  புகைப்  பிடித்துள்ளார்.

பிறகு வந்து முஸ்லிம் சகோதரரிடம் நான் இறங்கி வெளியில் சென்றதற்கான காரணம் நான்  அனைத்து மதங்களையும் மதிப்பவன்  எனது புகைத்தலால் நோன்பாளியை பாதிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். 

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வளவோ செயற்பாடு நடைபெறும் போதும் இப்படி அனைத்து மதங்களையும் மதிப்பவர்களும் காணப்படுகின்றார்கள் என்பது முக்கிய அம்சம் ஒன்றாகும்.

அப்ராஸ் அசார்